Latest News
லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு… எல்லாரும் விளக்கேற்றி மந்திரம் சொல்லுங்க… பக்தர்களுக்கு வேண்டுகோள்..!
திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலக்கப்பட்ட நிலையில் வீட்டில் எல்லோரும் விளக்கேற்றி மந்திரம் சொல்லுங்கள் என்று திருப்பதி தேவஸ்தான பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகின்றது.
இந்த லட்டுவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி இருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தை தொடர்ந்து பக்தர்கள் தங்களின் வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றும் படி திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
அதன்படி பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி ‘ஓம் நமோ வெங்கடேசாயா.. ஓம் நமோ நாராயணா.. ஓம் நமோ பகவதே நமஹ’ என மந்திரம் படிக்கவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதன்படி மக்கள் பலரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி மந்திரம் சொல்லி பூஜை செய்திருந்தார்கள்.
ஏழுமலையானை வேண்டி மந்திர உச்சரிக்குமாறு பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி இருக்கின்றது. மேலும் விளக்கேற்றி மந்திரம் படித்தால் கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சாப்பிட்டதால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.