national
வயநாடு நிலச்சரிவு.. 67 பேரின் உடல் அடையாளம் தெரியவில்லை… கேரளா அரசு எடுத்த அதிரடி முடிவு…!
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்திருக்கிறார்கள்.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முண்டகை, சூரல்மலை, அட்டவலை மற்றும் பூஞ்சிரித்தோடு உள்ளிட்ட கிராமங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரேடார் கருவிகள் மூலமாக தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி நீடித்து வருகின்றது.நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்திருக்கின்றது.
34 பெண்கள், 36 ஆண்கள், 11 குழந்தைகள் என 81 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 17 நிவாரண முகாம்களில் 77 குடும்பங்களை சேர்ந்த 2,597 பேர் தங்கப்பட்டு அவர்களுக்கு உணவு, உடை தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
வயநாடு பேரழிவை முன்னிட்டு மாநில பேரிடராக கேரளா அரசு அறிவித்து அரசாணையை வெளியிட்டு இருக்கின்றது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 67 பேரில் உடல் அடையாளம் காணப்படாததால் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்காக புத்துமலை பகுதிகளில் ஹரிசன் தேயிலை தோட்டம் வழங்கிய இடத்தில் சர்வ மத பிரார்த்தனையுடன் 67 பேரின் உடல்களை மொத்தமாக நல்லடக்கம் செய்யும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.