லட்டுவை கிண்டல் செய்றீங்களா…? பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி…!

லட்டுவை கிண்டல் செய்றீங்களா…? பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி…!

லட்டு விவகாரம் தொடர்பாக பேசியதற்கு நடிகர் கார்த்திக் பவன் கல்யாணிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு இருக்கின்றார்.

கார்த்திக் மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியாக உள்ள மெய்யழகன் என்ற திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் சத்யம்-சுந்தரம் என்ற பெயரில் வெளியாகின்றது. ஹைதராபாத்தில் இது தொடர்பான பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்திக் கலந்து கொண்டார். அப்போது காமெடி காட்சியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற காமெடியில் புகைப்படத்தை திரையில் போட்டு காட்டினார்கள்.

கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு கார்த்தி லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. மிகவும் சச்சையான விஷயம், எனக்கு லட்டே வேண்டாம் என்று கிண்டலாக கூறியிருக்கிறார். இது குறித்து ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் காட்டமாக பேசியிருக்கின்றார். அவர் அதில் தெரிவித்திருந்ததாவது நான் தற்போது ஒரு சினிமா நிகழ்ச்சியில் பார்த்தேன்.

லட்டு குறித்து பேசினால் சர்ச்சையாகும் என்று தெரிவித்து இருந்தார்கள். அவ்வாறு சொல்லக்கூடாது, நாங்கள் உங்களை நடிகர்களாக மதிக்கின்றோம். சனாதான தர்மத்தை பற்றி பேசும்போது ஒன்றுக்கு 100 முறை யோசித்துப் பேச வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து லட்டு குறித்து பேசியதற்கு கார்த்தி வருத்தம் தெரிவித்திருக்கின்றது. அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் மரியாதைக்குரிய பவன் கல்யாண் அவர்களே லட்டு குறித்து நான் பேசியதால் ஏற்பட்ட தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

பெருமாளின் தாழ்மையான பக்தன் என்ற முறையில் அவரின் மரபுகளை கடைப்பிடித்து வருகிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார். சமீப நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையால் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் ஏழுமலையான் கோவிலில் நேற்று மகா சந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது, மேலும் லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.