Connect with us

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்… எது தெரியுமா…?

Latest News

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்… எது தெரியுமா…?

ஆஸ்கார் 2025 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக லேப்டாப் லேடிஸ் என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

ஆஸ்கார் விருதுக்கு நாடு முழுவதிலிருந்தும் 29 படங்களை இந்திய திரைப்பட கூட்டமைப்பு தேர்வு செய்து பரிந்துரை செய்திருந்தது. இதில் 6 தமிழ் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, விக்ரம் நடித்த தங்களான், சூரி நடித்த கொட்டுக்காளி, ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை ஆகிய படங்கள் ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தன.

அது மட்டும் இல்லாமல் ஹிந்தியில் 12 படங்கள், தெலுங்கில் 6 படங்கள், மலையாளத்தில் 4 படங்கள், மராத்தியில் 3 படங்கள், ஒடியாவில் ஒரு படம் உள்ளிட்ட 29 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இவற்றில் 2025 விருதுக்கு இந்தியா சார்பாக அதிகார்வபூர்வமாக லாபட்டா லேடிஸ் என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்ட அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்த பட்டியலில் ஆடி ஜீவிதம், ஆர்ட்டிகல் 370, கல்கி 2898 ad, ஆட்டம் உள்ள திரைப்படங்கள் பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் லாப்டா லேடிஸ் திரைப்படம் மட்டும் அதிகாரபூர்வமாக இந்தியா சார்பாக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

More in Latest News

To Top