Corona (Covid-19)
இந்தியாவில் கொரோனாவுக்கு தப்லீக் ஜமாத் மாநாடுதான் காரணம்- மத்திய அரசு
இந்தியாவில் கடந்த மார்ச் 25ம் தேதி முழு லாக் டவுன் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 15 நாட்கள் கடும் லாக் டவுன் அமலில் இருந்தது. அந்த நேரத்தில்தான் கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் பரவிக்கொண்டு இருந்தது.
லாக் டவுனுக்கு ஒரு வாரம் முன்புதான் அதாவது மார்ச்16ம்தேதி டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடந்துள்ளது. இதில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முறையான அம்சங்கள் அரசு விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்காமல் இந்த மாநாடு நடந்துள்ளது.
அந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவ தப்லீக் ஜமாத் மாநாடுதான் காரணம் என தொடர்ந்து அரசு குற்றம்சாட்டி வந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பல வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவுக்குள் வர அவர்களுக்கு பல ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இது பற்றிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பதில் அளித்துள்ளார்.
தொற்று பரவிய தகவல் கிடைத்ததும் தப்லீக் ஜமாத் கட்டிடத்தில் இருந்து 2361 பேர் டெல்லி போலீசால் வெளியேற்றப்பட்டதாகவும் 233 பேர் கைது செய்யப்பட்டதாகவும் 36 நாடுகளை சேர்ந்த 969 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.