Latest News
ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… கொல்கத்தாவில் மற்றொரு சம்பவம்…!
கொல்கத்தாவில் ஓடும் பேருந்தில் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அரங்கேறிய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கஸ்பா பகுதியில் இன்று காலை 9.30 மணி அளவில் ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு சக பயணி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றார். இந்நிலையில் சக பயணிகள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள்.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட நபர் பேருந்தில் இருந்து இறங்கி தப்பு ஓட முயற்சி செய்தார். இருப்பினும் அங்கிருந்தவர்கள் அவரை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். இது குறித்து பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் போலீசார் அந்த நபரை கைது செய்தார்கள் .
ஏற்கனவே கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓடும் பேருந்திலேயே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அரங்கேறிய சம்பவம் மேலும் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.
பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பான நாடுதானா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒரு பெண்ணுக்கு எங்கு போனாலும் பாலியல் தொல்லை அரங்கேறி வருகின்றது. பெண்களுக்கு எப்போதுதான் சுதந்திரம் கிடைக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.