Connect with us

இளைஞரின் வயிற்றில் இருந்த பொருள்கள்… அறுவை சிகிச்சையில் ஷாக்கான மருத்துவர்கள்… அப்படி என்ன இருந்துச்சு..?

national

இளைஞரின் வயிற்றில் இருந்த பொருள்கள்… அறுவை சிகிச்சையில் ஷாக்கான மருத்துவர்கள்… அப்படி என்ன இருந்துச்சு..?

பீஹார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசிக்கும் 22 வயதான இளைஞர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்திருக்கின்றார். அந்த இளைஞரை அவரின் குடும்பத்தினர் அருகிலுள்ள மோதிஹாரியில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அவருக்கு எக்ஸ் ரே எடுத்ததில் அவரது வயிற்றில் உலோகப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை மூலம் அவரின் வயிற்றிலிருந்து சாவி வளையம், சிறிய கத்தி, இரண்டு நகவெட்டி உள்ளிட்ட உலகப் பொருட்களை டாக்டர்கள் அகற்றினார்கள்.

அறுவை சிகிச்சை செய்த டாக்டர் குழுவின் தலைவர் அமித் குமார் தெரிவித்த போது நாங்கள் இளைஞரிடம் கேட்டபோது அவர் சமீபத்தில் உலோக பொருள்களை விழுங்க தொடங்கியது தெரியவந்தது. சிகிச்சைக்கு பின்னர் தற்போது இளைஞர் நலமாக இருக்கின்றார். உடலில் முன்னேற்றம் இருக்கின்றது. அவருக்கு சில மனநல பிரச்சனைகள் உள்ளன. அதற்காக அவர் மருந்து உட்கொண்டு வருகின்றார். விரைவில் குணமடைந்து வீடு திரும்பும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

More in national

To Top