---Advertisement---

ஜூலை, ஆகஸ்ட் வந்தாலே இப்படித்தான்… சிக்கி திணறும் கேரள மாநிலம்…!

Published on: July 31, 2024
---Advertisement---

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுவது கேரளா மாநிலத்தில் அடிக்கடி பேரழிவு ஏற்படுகின்றது. கன மழை பெய்யும் போது நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். இது போன்று நடக்கும் போது உயிர்பலியும் ஏற்படுகின்றது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

அதிலும் கனமழை பெய்யும் போது அடிக்கடி நிலச்சரிவு வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. இதனால் உயிர்பலி அதிகரித்து வருகின்றது. வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதனை ஒட்டிய மாதங்களிலும் பேரழிவு ஏற்படுகின்றது. நேற்று வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவால் 170 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்,

இதேபோன்று 1974 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடுக்கி அடிமாலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 33 பேர் பலியாகினர். அதைத்தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்டையம் பகுதியில் நடந்த நிலச்சரிவில் 29 பேர் பலியாகி இருந்தார்கள். இதேபோல் 2019 ஆம் ஆண்டு 60 பேர் இறந்துவிட்டனர் 11 பேர் காணாமல் போயினர். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலச்சரிவில் 66 பேர் பலியாகினார். 2001 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் 38 பேரும், 2021 ஆம் ஆண்டு இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேரும் பலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

পড়তে ভুলবেন না