national
வயநாடு நிலச்சரிவு… 4 கோடி ரூபாயை ஒதுக்கிய கேரளா அரசு…!
கேரள மாநிலம், வயநாட்டில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் கடந்த 29ஆம் தேதி முண்டகை, சூரல் மழை, மேப்பாடி உள்ளிட்ட மூன்று பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 12000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 10,000 அனைத்து 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
600க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதந்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அவர்களை மீட்பதற்கான பணிகள் 5-வது நாளாக தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இதுவரை 340 பேர் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். சம்பவம் அரங்கேறி நான்கு நாட்கள் ஆன நிலையில் மாயமானவர்களை தேடும் பணி இன்னும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பலர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களின் நிலை என்னவாகி இருக்கும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவித்து வருகிறார்கள். எது எப்படி என்றாலும் கடைசி நபர் மீட்கும் வரை தேடுதல் பணி தொடரும் என்று கேரளா அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் முண்டகை மற்றும் சூரல் மலைப்பகுதிகளில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 400 கோடி ஒதுக்குவதாக கேரள அரசு முடிவு செய்துள்ளது.