வளர்த்த கெடா நெஞ்சில் பாய்ந்தது இதானா… வளர்ப்பு பூனை கடித்ததில்… ஓனருக்கு நேர்ந்த கொடுமை…!
ramya
Posted on
கர்நாடக மாநிலத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது .
கர்நாடகா மாநிலம், சிவமொக்கா மாவட்டத்தில் வளர்ப்பு பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். பூனை கடித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்றால் 50 வயதான கங்கிபாய் என்ற பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இரண்டு மாதத்திற்கு முன்பே அப்பபெண்ணின் வளர்ப்பு பூனை அவர்களை கடித்து இருக்கின்றது. பூனை கடிக்கு தேவையான தடுப்பூசிகளை அவர் சரியாக எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் ரேபிஸ் நோய் முற்றி அவர் உயிரிழந்திருக்கின்றார். பொதுவாக நாய் கடித்தால் தான் ரேபிஸ் பரவி உயிரிழப்பார்கள். ஆனால் பூனை கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.