national
வினேஷ் போகத் தகுதி நீக்கம்… கர்நாடக முதல்வர் சித்ராமையா உருக்கமான பதிவு…!
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தியா இதுவரை மூன்று வெண்கல பதக்கங்களை பெற்றிருக்கின்றது. பதக்க பட்டியலில் 63வது இடத்தில் உள்ளது .
நேற்று இரவு நடைபெற்ற மல்யுத்த பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரை இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் இருவர் மோதினர். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளி கணக்கில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ இடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிற்கு முன்னேறி இருந்தார். இதன் மூலம் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் உறுதியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதிப் போட்டி இன்று நடைபெற இருந்தது. போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்ப்ரெஸ்ட்டண்ட் என்பவரை எதிர்க்கொள்ள இருந்தார்.
இந்நிலையில் உடல் எடை வினேஷ் போகத்துக்கு சில கிராம்கள் கூடியிருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நீச்சத்து குறைபாடு காரணமாக மல்யுத வீராங்கனை வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா வேதனையுடன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.
“அந்த பதிவில் ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஏற்பட்ட துருதிஸ்டவசமான சம்பவம் வேதனை தருகின்றது, உங்களின் வலிமை உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு தேசத்தை எப்போதும் ஊக்கப்படுத்தி உள்ளது, உங்களின் எண்ணற்ற சாதனைகள் இந்தியாவிற்கு நீங்கள் கொண்டு வந்த பெருமையை இந்த சம்பவம் மறக்கடித்து விடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், உறுதியாக இருங்கள் வினேஷ், உங்களையும் உங்கள் பயணத்தையும் நாங்கள் நம்புகிறோம். நீங்கள் எப்போதும் எங்கள் சாம்பியனாக இருப்பீர்கள்” என்று பதிவிட்டு இருக்கின்றார்.