national
கடைகளில் பெயர் பலகை… இதுக்காக தான் இந்த உத்தரவு… அடம் பிடிக்கும் உ.பி அரசு…!
உத்திரபிரதேசத்தில் இருக்கும் கன்வர் யாத்திரா வழிதடத்தில் உள்ள உணவகங்களில் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பிரசித்தி பெற்ற மகாகாலேஸ்வரர் கோவிலிலும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.
இதற்கிடையில் கன்வர் யாத்திரை நடைபெறும் பாதைகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை எழுதி வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 22ஆம் தேதி இடைக்கால தடை விதித்திருந்தது. மேலும் பேர் பலகையில் உரிமையாளர் பெயரை எதற்காக எழுதி வைக்க வேண்டும் என்ற விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் அதை நியாயப்படுத்தி விளக்கம் கொடுத்துள்ளது. இந்த உத்தரவு அமைதியை உறுதி செய்யவும் யாத்திரைக்கு பாதிப்பில்லாத வகையில் சீராக நடத்தவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்றும் இதில் யாருடைய மத நம்பிக்கையும் புண்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பல யாத்திரிகர் கடைகள் மற்றும் உணவகங்களின் பெயர்கள் தங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக மக்கள் அரசிடம் புகார் கொடுத்திருந்தனர். அதற்காகத்தான் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்ததாக தங்களது வாதத்தை முன் வைத்தது.