Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

national

ராகுல் காந்தி ரொம்ப ஆபத்தானவரு, நாட்டையே அழிச்சிடுவாரு… அதானி முறைகேடு… கங்கனா காட்டம்…!

ராகுல் காந்தி மிக ஆபத்தானவர் நாட்டையே அழித்துவிடுவார் என்று கங்கனா ரானவத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்து பேசியிருந்தார். செபியின் நேர்மை சமரசத்துக்கு உள்ளாகி இருக்கின்றது என்று குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் கங்கனா ரானவத் ராகுல் காந்தி குறித்து சர்ச்சையான விஷயத்தை பகிர்ந்து இருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது: “ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர், விஷமி, அழிவுகரமானவர் அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த நாட்டையே அழித்துவிடலாம் என்பது அவரது செயல்திட்டமாக உள்ளது. நமது பங்குச்சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கை ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்று இரவு உறுதியாகிவிட்டது.

இந்த நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் சீர்குலைக்க அவர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். ராகுல் காந்தி வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக மாட்டார்கள். நீங்கள் ஒரு அவமானம்” என்று பேசி இருக்கின்றார். இந்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.