national
புதுச்சேரியில் புதிய கவர்னராக கைலாசநாதன் பதவியேற்பு… வாழ்த்து சொன்ன முதல்வர்…!
புதுச்சேரியின் புதிய கவர்னராக கைலாசநாதன் பொறுப்பேற்று இருக்கின்றார்.
புதுச்சேரி கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் . இதனால் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே புதுச்சேரி பொறுப்பு கவர்னர் சி பி ராதாகிருஷ்ணன் மராட்டிய மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.
புதுவையின் புதிய கவர்னராக கேரள மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாசநாதனை ஜனாதிபதி திரௌபதி முர்மு நியமித்திருந்தார். இதைத்தொடர்ந்து புதிய கவர்னர் கைலாசநாதன் நேற்று மதியம் 12 மணியளவில் புதுச்சேரிக்கு வந்தார். அவருக்கு புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி மந்திரிகள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் வரவேற்பு வழங்கினார்கள்.
இதையடுத்து இன்று கவர்னர் மாளிகையில் புதுச்சேரியில் 25வது கவர்னராக கைலாசநாதன் பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் புதிய கவர்னர் கைலாசநாதர் எனக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்திருந்தார். மேலும் புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்ற கைலாசநாதனுக்கு முதல்வர் ரங்கசாமி சபாநாயகர், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் என அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.