Latest News
மகனுக்கு ஆப்பிள் ஐபோன்-16 பரிசளித்த குப்பை வியாபாரி… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!
குப்பை வியாபாரியான ஒருவர் தனது மகனுக்கு சந்தையில் தற்போது அறிமுகமாகி இருக்கும் ஐபோன் 16 ஃபோனை பரிசாக வழங்கியிருக்கின்றார்.
ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்களை வாங்குவதற்கு என்று ஏகப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். புதியதாக லான்ச் ஆகும் மொபைல் போன்களை வாங்குவதற்கு இளைஞர்கள் நீ நான் என்று போட்டி போட்டு காத்திருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த வாரத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரியஸ்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இந்த போனை வாங்குவதற்கு இளைஞர்கள் காத்துக் கிடக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் குப்பைகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் தனக்கென்று 85 ஆயிரம் மதிப்புடைய ஐபோன் ஒன்றையும், தன் மகன் நன்றாக படிப்பதை பாராட்டுவதற்கு புதிதாக அறிமுகமாகி இருக்கும் ஐபோன் 16 மொபைலை 1.5 கொடுத்து வாங்கி பரிசாக வழங்கியிருக்கின்றார்.
இந்த வியாபாரி தனது கையில் ஐபோனை வைத்துக்கொண்டு நெகழ்ச்சி உடன் பேட்டி எடுக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவுக்கு நெட்டிஷன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.