Connect with us

வீட்டு வேலை செய்யும் பெண் மீது திருட்டு புகார்… ஆனா கடைசியில் வச்ச ஆப்பு… அதிர்ச்சி சம்பவம்…!

national

வீட்டு வேலை செய்யும் பெண் மீது திருட்டு புகார்… ஆனா கடைசியில் வச்ச ஆப்பு… அதிர்ச்சி சம்பவம்…!

தன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் 15,000 திருடிவிட்டதாக கூறிய நகைக்கடைக்காரர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அவர் மீது கற்பழிப்பு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெண் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நகைக்கடைக்காரர் வீட்டில் வேலை செய்து வருகிறார்.

வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி நகை கடைக்காரர் அப்பெண்ணிடம் தவறான செயல்களில் ஈடுபட்டு இருக்கின்றார். ஜூன் மாதத்திற்கு பிறகு நகை கடைக்காரர் அப்பெண்ணிடம் தான் உன்னை விரும்புவதாக கூறி அவரை பலமுறை கற்பழித்துள்ளார். நாளுக்கு நாள் நகை கடைக்காரரின் தொல்லை அதிகரிக்க அவரது மனைவியிடம் தெரிவிக்க பணிப்பெண் முடிவு செய்து இருக்கின்றார்.

இருப்பினும் நகைக்கடைக்காரர் இது குறித்து வெளியே கூறினால் உன்னுடைய கணவரையும், குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டி இருக்கின்றார். கடந்த ஜூலை 18ஆம் தேதி நகைக்கடைக்காரர் தனது மனைவி வீட்டில் விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டு இருக்கின்றார்.

இந்த விஷயத்தை மூடி மறைப்பதற்காக அந்த பெண்ணுக்கு நகைக்கடைக்காரர் பணமும் கொடுத்து இருக்கின்றார். இருப்பினும் அப்பெண் வாங்க மறுத்துவிட்டார். இதையடுத்து நகைக்கடைக்காரர் அப்பெண் மீது பணத்தை திருடிவிட்டதாக போலீசீல் புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரை தொடர்ந்து போலீசார் அப்பெண்ணை கைது செய்து விசாரித்த போது முதலில் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்ட அந்த பெண் மனமுடைந்து அழுது நடந்த சம்பவம் அனைத்தையும் தெரிவித்து இருக்கின்றார்.

இதையடுத்து போலீஸ் சார் நகை கடைக்காரர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

More in national

To Top