Latest News
ஜப்பான்காரன் கண்டுபிடித்த புது ஐடியா… இறந்தவர்களின் சாம்பலில் இருந்து ஒரு வருடத்தில் இத்தனை கோடி லாபமா..?
இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டிய பிறகு அதிலிருந்து எஞ்சிய உலோகங்களை விற்று ஜப்பானிய நகரங்களில் அதிக லாபம் ஈட்டி வருகின்றார்கள்.
ஜப்பானில் வருடம் தோறும் சராசரியாக சுமார் 1. 5 மில்லியன் மக்களின் சடலங்கள் எரிக்கப்பட்டு வருகின்றது. அந்த நாட்டு சட்டப்படி எடுக்கப்பட்டவர்களின் சாம்பலையும் அதிலிருந்து மிஞ்சிய எலும்புகளை மட்டுமே உறவினர்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இறந்தவர்களின் உடலில் அணிந்திருக்கும் பொருத்தப்பட்டிருக்கும் தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் எரியூட்டப்பட்ட சாம்பலில் மிச்சம் இருந்தால் அது உறவினர்களுக்கு கொடுக்கப்பட மாட்டாது.
குறிப்பாக தங்களின் பற்களை அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் தங்கம், பலோடியம் உள்ளிட்ட உலோகங்களை, எலும்புகளில் இம்பிளிட்டாக பொருத்தப்பட்டிருக்கும் டைட்டானியம் உள்ளிட்ட உலோகங்களும் சாம்பல்களில் மிஞ்சி இருக்கும். எனவே பல்வேறு ஜப்பானிய நகரங்களில் அதை சேகரித்து விற்பனை செய்து பணமாக்கி வருகிறார்கள்.
ஜப்பானில் 97% மயானங்களை அரசை நடத்துவதால் இதன் மூலம் பெருநகரங்கள் அதிக லாபம் சம்பாதித்து வருகின்றது. அதன்படி கடன் 2023 ஆம் ஆண்டு மட்டும் இதுபோன்ற உலோகங்களை விட்டு சுமார் 6.49 பில்லியன் யென் வரை சம்பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பு படி 377 கோடி ரூபாய் ஆகும். குறிப்பாக கியோடா நகரம் 303 மில்லியன் யென், யோகோஹாமா நகரம் 233 மில்லியன் யென், நகோயா நகரம் 225 யென் பில்லியன் சம்பாதித்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.