தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் பிரபலமாக இருந்த இன்ஸ்டா பிரபலம் திடீரென்று தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.
தன்னை தானே திருமணம் செய்து கொள்வதாக துருக்கியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் ஒருவர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் தன்னைத்தானே முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதன் மூலமாக மிகப் பிரபலமானவர்தான் சோலோகெமி. சமீப காலமாக பிரபலமாகி வந்த இவர் பெயர் குப்ரா அய்குட் இவருக்கு 26 வயதாகின்றது.
துருக்கியை சேர்ந்த இவர் இன்ஸ்டாவில் மிகப் பிரபலமான செலிபிரிட்டி. இவர் நேற்றைய தினம் தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி மாவட்டத்தில் இருக்கும் அவரின் வீட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரின் உயிரிழப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
மேலும் அவர் கடைசியாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில் உடல் எடையை அதிகரிப்பது மிக சவாலாக இருக்கின்றது. நான் விரைவில் உடல் எடையை அதிகரித்து ஆக வேண்டும். ஆனால் தினமும் ஒரு கிலோ உடல் எடை குறைந்து கொண்டே வருகின்றேன் என வேதனையுடன் தெரிவித்தார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அவரின் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் அய்குட் உடலின் அருகில் கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.