Latest News
பேருந்து டிக்கெட் விலையில் விமான சேவை… இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அதிரடி ஆஃபர்…!
பேருந்து டிக்கெட் விலையில் விமான சேவையை வழங்குவதற்கு இண்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூ. 1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் கிராண்ட் ரன்வே பஸ் சேல் என்ற ஆப்பரை இண்டிகோ நிறுவனம் தொடங்கி இருக்கின்றது. இந்த சலுகையில் பேங்க் ஆப் பரோடா பெட்ரோல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விமான டிக்கெட் 15 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சலுகை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை இந்த நாட்களில் சலுகை விலையில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இது விமானத்தில் பயணிப்பாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திடீர் அறிவிப்பாக இண்டிகோ நிறுவனம் இந்த ஆஃபர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.