Latest News
மகளுக்கு கடிதம் எழுத கற்றுக் கொடுத்த தாய்… மகிழ்ச்சியில் திளைத்த மகள்… வைரலாகும் வீடியோ..!
மகளுக்கு கடிதம் எழுதுவது எப்படி என்றும் அதை எப்படி அனுப்புவது என்றும் தாய் கற்றுக் கொடுத்திருக்கின்றார். இதனால் அந்த மகள் மகிழ்ச்சியாக இருந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடிதம் எழுதுவது என்ற நடைமுறையை மறந்து விட்டது. கடிதம் எழுதுவது என்றால் என்ன என இந்த தலைமுறையினர் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடிதம் எழுதுவது கடந்த காலம். ஆனால் இது ஈமெயில் whatsapp காலம். instaவில் ஸ்டாப் சாட்டில் அரட்டைகள் தொடர்கின்றன. இன்றைய குழந்தைகள் கடிதம் எழுதிப் படிப்பது பள்ளி பாடங்களில் மட்டும் தான். அது அவர்களுக்கு விடுமுறை கடிதம் எழுதுவதற்கு தான் பயன்படுகிறது.
ஒரு காலத்தில் உறவு முறையை வளர்ப்பதற்கு கடிதம் மட்டுமே மிக உதவியாக இருந்தது. அது அளவில்லா மகிழ்ச்சி பெட்டகமாக பாதுகாக்கப்பட்டது என்று இன்றைய குழந்தைகள் அறிய மாட்டார்கள். கடிதத்திற்கு அவர்களுக்கும் தொடர்பே இல்லை. அவர்கள் பயன்படுத்துவதும் இல்லை. இந்நிலையில் ஒரு இந்திய பெண் தனது மகளுக்கு கடிதம் எப்படி எழுதுவது, அதை எப்படி அனுப்புவது என்பதை நேராக விளக்கி மகளின் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வந்திருக்கின்றார்.
அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில் தாய் தனது 10 வயது மகளுக்கு வாழ்த்து அட்டை தயாரித்து அதில் தாத்தாவுக்கு கடிதம் எழுத கற்றுக்கொடுக்கின்றார். பின்னர் இருவரும் தபால் நிலைய வாசலுக்கு வந்து இறங்குகிறார்கள். உள்ளே சென்ற அவர்கள் அஞ்சல் உள்ளங்களை வாங்கி கடிதத்தில் ஓட்டுகிறார்கள்.
பின்னர் தபால் பெட்டிக்குள் கடிதத்தை சிறுமி போடுகின்றார். அப்போது அவர் முகத்தில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அது மறுநாள் தாத்தாவுக்கு கிடைத்துவிட்டதா? என்பதை தெரிந்து கொள்கின்றார். தாத்தா கடிதத்தை பிரித்து புன்னகையுடன் படிப்பதாக வீடியோ முடிகின்றது. மேலும் வீடியோ பின்னணியில் தாய் பேசும் காட்சிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram