Connect with us

கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை… கனமழை கொட்டி தீர்க்கும்… வானிலை எச்சரிக்கை…!

national

கேரளாவில் வரும் 5-ம் தேதி வரை… கனமழை கொட்டி தீர்க்கும்… வானிலை எச்சரிக்கை…!

கேரள மாநிலத்தில் வரும் 5-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது. இதனால் அங்கு பல மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கேரள மாநிலத்தில் வரும் 5-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று கோழிக்கோடு, காசர் கோடு, கண்ணூர், மல்லபுரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் டியூஷன் மையங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாலக்காடு மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள் டியூஷன் மையங்கள், அங்கன்வாடி அனைத்திற்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருக்கின்றார். இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் ஏராளமான பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றது. இதனால் அந்த பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

More in national

To Top