national
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு… 24 மணி நேரத்தில் வலுப்பெறும்… வானிலை எச்சரிக்கை…
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் அது வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தமிழகம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், டெல்லி, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகின்றது. வயநாட்டில் கொட்டிய கனமழையால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 தாண்டி அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது.
மேலும் இமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை கொட்டி வருகின்றது. மேகவெடிப்பால் மண்டி, சிம்லா, குல்லு ஆகிய மாவட்டங்களில் மண் சரிவு ஏற்பட்டு இருக்கின்றது. இதில் உயிரிழந்தவர்களில் 5 பேரின் உடல் தற்போது வரை நீக்கப்பட்டுள்ளது. 50 பேர் காணாமல் போய் உள்ள நிலையில் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இதனால் கங்காரா, குல்லு மற்றும் மண்டி ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, வயநாடு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நாளை வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.