national
11 சென்டி மீட்டர் வரை வாய்ப்பு… வெளுத்து வாங்க போகுது மழை… தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்…!
தமிழகத்தில் 11 செண்டி மீட்டர் வரை மழை வெளுத்து வாங்க போகுது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு ராஜஸ்தான், பீகார், அசாம், மேகாலயா, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மஹே ஆகிய மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும்.
வடமேற்கு இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது. அதேபோல் சண்டிகர் மற்றும் அரியானாவில் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று கூறப்படுகின்றது.
இன்று கிழக்கு ராஜஸ்தான் மீது அதீத தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை 14 மற்றும் 15 ஆகிய செய்திகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கின்றது.