Connect with us

வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் குறையும்… மத்திய நிதி அமைச்சகம் தகவல்…!

national

வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் குறையும்… மத்திய நிதி அமைச்சகம் தகவல்…!

இந்தியாவில் வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. பருவ மழை காரணமாக நீர் தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்து இருப்பதால் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் வரும் காலங்களில் உணவு பணவீக்கம் குறையும் என்று கூறப்படுகின்றது.

தென்மேற்கு பருவமழை சீராக இருந்ததால் கோடையில் விதிக்கப்பட்ட பயிர்களின் விளைச்சல் அதிகப்படுத்தி இருக்கின்றது. நீர்த்தேக்கம் அதிகரித்து இருப்பதால் தற்போதைய காரிப் மற்றும் வரவிருக்கும் ராபி பயிர் உற்பத்திக்கு நல்ல விளைச்சல் கொடுக்கும். இதன் காரணமாக வரும் மாதங்களில் உணவு பணம் வீக்கம் குறையும் என்று இந்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த ஜூலையில் ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.5 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்திருந்தது. இதற்கு உணவு பொருள்களின் விலை முந்தைய உச்சத்தில் இருந்ததுதான் எனக் கூறப்பட்டது. சில்லறை பண வீக்கத்தில் கிட்டத்தட்ட பாதி பங்கு வகிக்கும் உணவு பணவீக்கம் ஜூன் மாதத்தில் 9. 36 சதவீதமாகவும், ஜூலையில் 5.4 சதவீதமாகவும் சர்வதேச அளவில் தேவை அதிகரித்து இருப்பது இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவித்திருக்கின்றது, எனினும் இறக்குமதியும் அதிகரித்து உள்ளது.

More in national

To Top