national
அது எப்படி திமிங்கலம்..? 500 ரூபாய் திருமணத்தை முடித்த ஐஏஎஸ் ஜோடி… சோசியல் மீடியாவில் செம வைரல்…!
ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படுவது திருமணம். அந்த திருமணத்தை தடபுடலாக பலரும் நடத்துவார்கள். அம்பானி குடும்பத் திருமணம் போல கோடிகளை கொட்டி செலவு செய்ய முடியவில்லை என்றாலும் தங்கள் தகுதிக்கேற்ப சற்று ஆடம்பரமாகவாவது திருமணத்தை செய்வார்கள்.
ஆனால் திருமணத்திற்கு அதிக செலவு செய்து ஆடம்பரத்தை வெளிக்காட்டுவதை விட அளவான செலவு செய்து வளமாக வாழ்ந்து காட்டுவதே சிறந்த குடும்பம் என்பதை உணர்த்தும் விதமாக வெறும் 500 ரூபாயில் திருமணத்தை முடித்துக் காட்டியிருக்கிறார்கள் ஐஏஎஸ் ஜோடி. அவர்கள் விரும்பினால் பல லட்சங்களை செலவு செய்து திருமணத்தை செய்திருக்க முடியும். ஏராளமானவர்களை அழைத்து ஊர் மெச்சும்படி திருமணத்தை நடத்தி இருக்கலாம்.
ஆனால் பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கும் வகையில் எளிமையாக திருமணத்தை நடத்திக் காட்டி இருக்கிறார்கள் அந்த ஜோடி. இந்தியாவில் உயர்நிலை பதவிகளான ஐஏஎஸ் பதவியில் இருக்கும் சலோனி சிதானி மற்றும் ஆஷிஷ் வஷித் தங்கள் திருமணத்தை எளிமையாக செய்ய விரும்பி இருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் குடும்பத்தினரை திருமண பதிவு செய்யும் இடத்திற்கு வரவழைத்து 500 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி எளிமையாக திருமணம் நடத்திக் கொண்டன. மாலை மாற்றியதுடன் திருமண சடங்குகள் முடிந்தது. ராஜஸ்தானில் உள்ள அல்வாரை சேர்ந்தவர் சலோனி சிதானி பஞ்சாபின் ஜலலலாபுரத்தை சேர்ந்தவர்கள். மத்திய பிரதேசத்தில் பணிபுரியும் இவர்கள் அங்கேயே திருமணம் முடித்துக் கொண்டனர். திருமணத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் விடுமுறை எடுத்து அவர்கள் மூன்றாம் நாள் பணிக்கு திரும்பி விட்டார்கள். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.