Connect with us

மனசுல பெரிய பாண்டவர் நினைப்பு… மனைவியை அடமானம் வைத்து சூதாட்டம்… அடுத்த அரங்கேறிய கொடூரம்…!

Latest News

மனசுல பெரிய பாண்டவர் நினைப்பு… மனைவியை அடமானம் வைத்து சூதாட்டம்… அடுத்த அரங்கேறிய கொடூரம்…!

பாண்டவர்களைப் போல மனைவியை கணவர் ஒருவர் அடமானம் வைத்து சூதாட்டம் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

புராணக் கதைகளில் மகாபாரதம் மிகவும் சிறப்பானது. மகாபாரதத்தில் பாண்டவர்களின் மூத்தவரான தருமன் தனது சூதாட்டத்தில் மனைவி திரௌபதியை அடமானம் வைத்து தோல்வி அடைவார். பின்னர் துச்சாதனன் பாண்டவர்களை பழி வாங்குவதாக எண்ணி திரௌபதியின் சேலையை உருவ கிருஷ்ணர் தொடர்ந்து சேலை கொடுத்து திரௌபதியை காப்பாற்றுவார்.

இந்த கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த கதையில் வருவது போல உத்திரபிரதேச மாநிலத்தில் ஒருவர் நிஜமாகவே தனது மனைவியை அடமானம் வைத்து சூதாடிய கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் நகரை சேர்ந்த நபர் ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையாகி இருக்கின்றார். சூதாட்டத்தில் தனது மனைவியை வைத்து விளையாடி இருக்கின்றார்.

இதில் அவர் தோல்வி அடைந்ததால் தனது மனைவியை நண்பர்களுக்கு வழங்கி இருக்கின்றார். அவர்கள் மனைவியை பாலியல் ரீதியாக துன்பறுத்த கணவர் அனுமதி வழங்கியிருக்கின்றார். இந்த கொடுமையை தடுத்துப் போராடிய மனைவியின் விரலை உடைத்து சித்திரவதை செய்து இருக்கின்றார் அந்த கணவர்.

இது தொடர்பாக மனைவி கொடுத்த புகாரின் பெயரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கணவர் மற்றும் அவரின் நண்பர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். சூதாட்டம் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையான கணவன் இதுவரை 7 ஏக்கர் நிலம், நகைகள் என அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்து விட்டதாக மனைவி அந்த புகாரில் தெரிவித்து இருக்கின்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

More in Latest News

To Top