கள்ளக்காதல் சந்தேகம்… நர்சின் கணவர் செய்த சதிவேலை… டாக்டர் சுட்டுக்கொலை வழக்கில் அதிர்ச்சி…!

கள்ளக்காதல் சந்தேகம்… நர்சின் கணவர் செய்த சதிவேலை… டாக்டர் சுட்டுக்கொலை வழக்கில் அதிர்ச்சி…!

மனைவி மீது சந்தேகப்பட்ட கணவர் மருத்துவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

டெல்லியில் தென்கிழக்கு பகுதியில் காளிந்தி குஞ்சு பகுதியில் இமா என்கின்ற சிறிய மருத்துவமனை வருகின்றது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த மருத்துவமனையில் ஜாவேத் அக்தர் என்கின்ற நிமானி மருத்துவர் பணியாற்றி வருகின்றார். நேற்று அதிகாலை மருத்துவமனையில் டாக்டர் ஜாவேத் அக்தர் மற்றும் நர்சுகளான கஜலா பர்வீன், முகமது கமில் ஆகியோர் பணியில் இருந்து இருக்கிறார்கள்.

அப்போது அங்கு இரண்டு சிறுவர்கள் சிகிச்சைக்கு வந்திருக்கிறார். அதில் ஒரு சிறுவனின் காலில் அடிபட்டு கட்டு போடப்பட்டிருந்தது. அதை அவிழ்த்து விட்டு புதிதாக கட்டு கட்ட வேண்டும் என்று சிறுவன் கூறினான். அதற்கு நர்ஸ் கமில்  கட்டு போட்டுவிட்டார். பின்னர் அந்த சிறுவன் மருத்துவரிடம் சென்று மருந்து சீட்டு வாங்க வேண்டும் என்று மருத்துவரின் அறைக்கு சென்றான். அங்கு சிறுவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மருத்துவரை சுட்டுக்கொன்றான்.

பின்னர் அந்த சிறுவனும் அவனுடன் வந்த மற்றொரு சிறுவனும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்கள். இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்தனர். மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

இதில் சந்தேகத்திற்கிடமான ஒரு சிறுவனை போலீசார் அடையாளம் கண்டார்கள். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுவன் துப்பாக்கியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு எனது முதல் கொலை என பெருமையுடன் பகிர்ந்திருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியானது.

அதில் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ் ஒருவருடன் டாக்டர் ஜாவித் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக அந்த கணவர் சந்தேகப்பட்டு இருக்கின்றார். இந்நிலையில் அந்த நர்சின் மகளை சிறுவன் காதலித்து வந்துள்ளான். இதை அறிந்த நர்சின் கணவர் டாக்டரை அந்த சிறுவன் மூலமாகவே கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கின்றார்.

அந்த சிறுவனிடம் நர்சிங் கணவர் நீ டாக்டரை கொலை செய்தால் எனது மகளை திருமணம் செய்து வைக்கின்றேன் என்று உறுதி அளித்து இருக்கின்றார். இதைத்தொடர்ந்து சிறுவன் டாக்டரை சுட்டுக்கொன்றது தெரிய வந்தது. மேலும் இந்த கொலைக்காக நர்சிங் கணவர் அந்த சிறுவனுக்கு பணமும் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனை வலை வீசி தேடி வருகிறார்கள்.