எங்க அம்மா வீட்டுக்கு போகணும்… அடம் பிடித்த மனைவி… கணவன் செய்த கொடூர சம்பவம்…!
அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மனைவி கேட்டதால் அவரின் மூக்கை கணவன் அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. லக்னோ பூர்வா பகுதியில் வசித்து வரும் ராகுல் மற்றும் அனிதா தம்பதியினருக்கிடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கின்றது.
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டி விட பிறந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அனிதா கணவரிடம் கூறி இருக்கின்றார். ஆனால் கணவரோ அங்கு செல்லக்கூடாது என்று தெரிவித்திருக்கின்றார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்து இருக்கின்றார். இதனால் ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றார். சிகிச்சைக்கு பின் ஆபத்தான கட்டத்தை கடந்த அனிதா தனது கணவனின் கொடூரமான செயல் தொடர்பாக போலீசில் புகார் அளித்து இருக்கின்றார். கணவன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.