national
பச்சிளம் குழந்தையை கடித்து கொதறிய தெரு நாய்கள்… மருத்துவமனையில் அதிர்ச்சி… குழந்தையின் நிலை என்ன..?
தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் உடலை தெரு நாய்கள் கடித்துக் கொதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் மூனம்கொண்டா என்ற பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் பிரசவார்டும் உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் நோய்களிகள், பெண்கள் என அதிக கூட்டம் காணப்படும். மேலும் வாரங்களில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று.
இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தின் ஒரு ஓரத்தில் தெரு நாய்கள் சேர்ந்து எதையோ ஒன்றை கடித்து குதறிக் கொண்டிருந்தது. சந்தேகப்பட்ட அங்கிருந்த போலீசார் உடனே அங்கு சென்று பார்த்தார். அந்த தெருநாய்கள் சேர்ந்து பச்சிளம் குழந்தை ஒன்றை கடித்து குதறி எது தெரியவந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே தெருநாய்களை விரட்ட முயன்றார். இருப்பினும் தெரு நாய்கள் அந்த குழந்தையை தொடர்ந்து கவ்வி கடித்து குதறின. இதில் குழந்தையின் வயிற்றுக்கு கீழ் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அவை தின்று விட்டது. எனினும் போலீசார் நீண்ட நேரம் போராடி தெரு நாய்களிடமிருந்து அந்த குழந்தையை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தார்.
குழந்தையின் பாதி உடலை தெருநாய் தின்றதால் அது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பது கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் மதுவாடா போலீஸ் மற்றும் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் முரளி ஆகியோர் வந்து பார்வையிட்டனர். இது குறித்து மருத்துவமனையில் இருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரி செய்தது அப்போது அந்த குழந்தை அவர்களுடையது கிடையாது என்று தெரியவந்தது.
இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்த யாரேனும் குழந்தையா என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். தெரு நாய்கள் கடித்த குதறிய குழந்தையின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.