national
பாகிஸ்தான் வீரருக்கு கிடைத்த கௌரவம்… சாதனை எண்ணில் பரிசு… வைரல் புகைப்படம்..!!
பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீமுக்கு அவர் ஈட்டி எறிந்த தூரத்திலேயே காரின் பதிவு எண் வழங்கப்பட்டு இருக்கின்றது.
நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் 92.97 மீட்டர் ஈட்டி எரிந்து 27 வயதான நதீமுக் தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். நதீமுக் தங்கப்பதக்கம் வென்ற அவருக்கு பஞ்சாப் முதல் மந்திரி மரியம் நவாஸ் ஹோண்டா சிவிக் என்ற காரை பரிசாக வழங்கியிருந்தது.
தங்க மகன் ஹர்ஷத் நதீமுக்கு அவரது சொந்த மியான் சன்னுவில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரி மரியம் நவாஸ் ஏற்கனவே அறிவித்தபடி இந்திய மதிப்பில் மூன்று கோடி வழங்கினார்.
மேலும் அவருக்கு சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்தார். அந்த சொகுசு காரில் அவர் ஈட்டி எறிந்த சாதனை தூரமான 92. 97 என்பதை அவர் கூறிய காரின் பதிவு எண்ணாக நம்பர் பிளேட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. முன்னதாக நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் இறங்கிய நீரஜ் சோப்ராவை தோற்கடித்து மகுடம் சூடிய நதிமுக்கு பாகிஸ்தானில் தடபுடலாக வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் பரிசுகளும் குவிந்து வருகின்றது. அரசு மற்றும் நிறுவனங்கள் கிட்டதட்ட 10 கோடி வரை அவருக்கு பரிசு தொகையை அறிவித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.