national
இந்தியால விரைவில் ஒரு பெரிய சம்பவம் இருக்கு…? ஹிண்டன்பர்க் கொடுத்த எச்சரிக்கை டுவிட்…!
ஹிண்டன்பர்க் ரிசர்ச் பதிவிட்டுள்ள இந்தியா குறித்த பதிவானது சமூக வலைத்தளங்களில் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கின்றது .
உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாகம் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம் கடந்து சில மாதங்களுக்கு முன்பு அதானி குழு நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது, அதானி குழுமம் பங்குமுறை கேடு, பங்கு மதிப்பை உயர்த்தி காட்டி அதன் மூலம் அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்களை தொடங்கி வரியைப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து ஹிண்டன்பர்க்கின் அறிக்கை வெளியான உடனே அதானி குடும்ப நிறுவனங்களின் பங்குகள் விலை மாபெரும் சர்வை சந்தித்தது, 86 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை சந்திக்க தொடங்கின. இதனால் அதானி குடும்பத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் செபி விசாரணை நடத்தினால் போதும் என்று கூறி இருந்தது. உண்மையில் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை என்பது அதானி குடும்பத்திற்கு மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கி இருக்கின்றது. இந்நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பரபரப்பு பதிவை வெளியிட்டுள்ளது.
அதில் விரைவில் இந்தியாவில் பெரிய சம்பவம் நடக்கப் போகின்றது என்று கூறியுள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவில் ஒரு முன்னணி நிறுவனம் குறித்த மோசடிகள் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்தப் போகின்றது என பலரும் பேசி வருகிறார்கள். இந்த விவகாரம் உலக அளவில் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கின்றது.