national
மலையாள சினிமாவில் நடிகைகளிடம் அத்துமீறும் முன்னணி நடிகர்கள்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!
கேரள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர்கள் நடிகைகளிடம் அத்துமீறலில் ஈடுபடுவதாக ஒரு அதிர்ச்சி அறிக்கை வெளியாகி இருக்கின்றது. மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் கடுமையான பாகுபாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு ஹைகோர்ட் நீதிபதி ஹேமா தலைமையிலான குழு ஓன்று அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழு இன்று அறிக்கை தாக்கல் செய்ய கேரள மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த கமிஷனில் பாதிக்கப்பட்ட பல நடிகைகள் உட்பட பெண் கலைஞர்களிடம் நேரில் விசாரணை நடத்தினார்கள். இதில் 2019 ஆம் ஆண்டு கேரள முதல் மந்திரி இடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை இதுவரை வெளியிடவில்லை. இதை தொடர்ந்து தகவல் உரிமை ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதிபதி ஹேமா அறிக்கையை வெளியிட உத்தரவிட்டிருந்தது.
ஆனால் ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று பிரபல மலையாள தயாரிப்பாளர் சஜிமோன் கேரளா ஹைகோர்ட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்து தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமா கமிஷன் அறிக்கை தற்போது வெளியாகி இருக்கின்றது. இதில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு இருக்கின்றது.
பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி நடிகைகளை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கட்டாயப்படுத்துகிறார்கள். பாலியல் ரீதியாக இணங்கும் நடிகைகளை ஒத்துழைக்கும் நடிகைகள் என வகைப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு மட்டுமே பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கிறார்கள். மலையாள திரை உலகத்தை மாபியா கும்பல் கட்டுப்படுத்துகின்றது. முத்தக்காட்சி, நிர்வாணமாக நடிக்க நடிகைகள் கட்டாயப்படுத்த படுகிறார்கள்.
மறுத்தால் மிரட்டப்படுகிறார்கள். நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்ட பட்டியலில் மலையாள சினிமாவை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். இதில் இயக்குனர்கள் மீதுதான் அதிக புகார்கள் இருக்கின்றது. பாலியல் ரீதியாக ஒத்துழைக்க மறுக்கும் நடிகைகளுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தொல்லை கொடுக்கிறார்கள்.
தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவே நடிகைகள் போலீசில் புகார் அளிப்பதற்கும் முன் வருவதில்லை. மேலும் நடிகர், நடிகைகளுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்களை ஓட்டுநர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும். படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகைகளுக்கு பாதுகாப்பான இருப்பிடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் மதுபானம் போதைப் பொருட்களை தடை செய்ய வேண்டும்” என்று அந்த அறிகையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.