national
திருப்பதி முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு… இனி இதுவும் கிடைக்கும்… வெளியான அறிவிப்பு..!
திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு வெண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி கோவில் வளாகத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் ஆய்வு செய்திருந்தார். அப்போது பக்தர்கள் குளிக்கும் அறையில் குழாய்கள் உடைந்து காணப்பட்டது. மேலும் மொட்டை அடிக்கும் இடம் சுத்தம் அல்லாமல் இருப்பதை பார்வையிட்டார்.
இது குறித்து கல்யாண கட்டாவில் உள்ள அதிகாரியிடம் மொட்டை எடுக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், உடைந்து குழாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பக்தர்களுக்கு தேவையான அளவு வெந்நீர் வழங்குவதற்காக பழுதடைந்த இயந்திரங்களையும் மாற்றி விட்டு புதிதாக பொருத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நேற்று திருப்பதியில் 73 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர்.
அதில் 26 ஆயிரத்து 942 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள். உண்டியலில் மட்டும் 3.98 கோடி ரூபாய் காணிக்கையாக வசூலாகி இருக்கின்றது. நேரடி இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.