Latest News
80 வயதான கணவரிடம் ஜீவனாம்சம் கேட்ட மனைவி… எல்லாம் கலியுகம் என நீதிபதி கருத்து…!
80 வயதான கணவனிடம் மனைவி ஜீவனாம்சம் கூறிய சம்பவம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
குஜராத்தில் முனீஸ் குமார் குப்தா என்ற நபர் ஒரு மருத்துவர் வசித்து வருகிறார். இவருக்கு 80 வயதான நிலையில் ஓய்வு பெற்று விட்டார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே 2018 ஆம் ஆண்டு சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கணவரின் மாத ஓய்வூதியம் 35 ஆயிரம் ரூபாயிலிருந்து ஜீவனாம்சமாக 15,000 கோரி குடும்ப நல நீதிமன்றத்தின் மனைவி மனுதாக்கல் ஒன்றை செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனைவிக்கு ஜீவனாம்சமாக 5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி சௌரத் ஷாம் விசாரித்ததற்கு பிறகு இது போன்ற வழக்குகள் கவலை அழிப்பதாகவும் கலியுகம் வந்துவிட்டது போல் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக குப்தாவின் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி அடுத்த விசாரணையில் தம்பதியினர் சமரசம் செய்து கொள்வார்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்து இருக்கின்றார்.