Connect with us

பள்ளிகளில் இனி குட் மார்னிங் வேண்டாம்… ஜெய்ஹிந்த் சொல்லுங்க… அரியானா அரசு அதிரடி உத்தரவு…!

national

பள்ளிகளில் இனி குட் மார்னிங் வேண்டாம்… ஜெய்ஹிந்த் சொல்லுங்க… அரியானா அரசு அதிரடி உத்தரவு…!

அரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி குட் மார்னிங் கூற வேண்டாம் அதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்று கூறுங்கள் என பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றது.

இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது “தேசப்பற்று நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இனி பள்ளிகளில் காலை குட் மார்னிங்-க்கு பதிலாக ஜெய்ஹிந்த் என சொல்ல மாணவர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தும் போது மாணவர்களிடையே ஒரு ஒற்றுமை உணர்வை ஏற்படும். தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் தியாகங்கள் பற்றி அறிந்து கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

தேசத்தை கட்டி எழுப்புவதில் மாணவர்களின் எதிர்கால பங்கை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும், சக ஊழியர்களுக்கு வணக்கம் என்று கூறுவதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்று சொல்லத் துவங்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in national

To Top