Connect with us

பெண்ணின் கள்ளத்தொடர்பு… மரத்தில் கட்டி வைத்து முடியை வெட்டி… பஞ்சாயத்து கொடுத்த கொடூர தண்டனை..!

national

பெண்ணின் கள்ளத்தொடர்பு… மரத்தில் கட்டி வைத்து முடியை வெட்டி… பஞ்சாயத்து கொடுத்த கொடூர தண்டனை..!

உத்திர பிரதேச மாநிலம் ஜோட்கி கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கு பஞ்சாயத்து சார்பாக கொடூர தண்டனை வழங்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

உத்திரபிரதேசம் மாநிலம் ஜோட்கி இப்ராடி ஹிம்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்டது, அந்த பெண்ணின் கணவர் மும்பையில் வேலை பார்த்து வருவதாகவும், அவருக்கு மூன்று குழந்தைகளும் உள்ளதாக கூறப்படுகின்றது.

அந்த பெண் தொடர்பில் இருந்த ஆணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய நான்கு குழந்தைகள் இருக்கின்றதாம். அந்தப் பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பெயரில் பெண் குடும்பத்தார் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. பஞ்சாயத்தின் உத்தரவின் பெயரில் அந்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, தலை முடியை வெட்டி, முகத்தில் கருப்பு மையை பூசி தண்டனை வழங்கியிருந்தார்கள்.

பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஆண் அவரை காப்பாற்ற முயன்ற போதும் அவரும் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை காப்பாற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து காவல் நிலைய பொறுப்பாளர் கிராமத்திலிருந்து 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களில் 15 பேரை கைது செய்து இருக்கிறார்கள்.

More in national

To Top