national
ஆந்திரா ,பிகாரை தவிர.. மற்ற மாநிலங்களுக்கு அல்வா மட்டும் தான் மிச்சம்… பிரகாஷ்ராஜ் அதிரடி…!
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை பிரகாஷ்ராஜ் கேலி செய்திருக்கின்றார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என் டி ஏ கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை அமைத்தது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் பெற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக மாறியிருக்கின்றன.
இன்று 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு 15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிஹாரில் புதிய சாலைகள் அமைப்பது தொடர்பாக 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவளித்த ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு மட்டுமே சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் அமலியில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த பட்ஜெட் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கிண்டலாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் ஆந்திரா பீகார் பட்ஜெட் வெளியாகிவிட்டது. மற்ற மாநிலங்கள் மகிழ்ச்சியாக அல்வாவை மட்டும் சாப்பிடுங்கள் என்று விமர்சித்து இருக்கின்றார்.