இந்தியா கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70,000 ஐ நெருங்கி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளை கவனிக்க அதிகமான நிதி தேவைப் படுவதால் அரசு சிக்கன நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு வருகிறது. அதன் பொருட்டு இன்று கூடிய அமைச்சர்வைக் கூட்டத்தில் இரு அதிரடி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட மாட்டாது.
- பிரதமர் உள்ளிட்ட எம்பிக்களின் ஓராண்டு சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகைகள் யாவும் கொரோனா நிவாரண நிதிக்காகப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதிகள் யாவும் கொரொனா நிவாரண சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.