national
அரசு பள்ளிகளில் தொடங்கும் நேரம் மாற்றம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!
புதுவையில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
புதுவையில் அரசு பள்ளிகளின் தொடங்கும் நேரம் மாற்றப்படுவதாக புதுவை அரசு அறிவித்து இருக்கின்றது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகள் காலை 9 மணிக்கு பதிலாக 9 15 மணிக்கு தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதிய அட்டவணைப்படி காலை 9.15-9. 30 வரை வழிபாடு, 9.30 மதியம் 12.25 வரை மூன்று பாட வேலைகள் நடக்கும். காலை 11 முதல் 11 10 வரை இடைவேளை. மதியம் 12:40-1.30 மதிய உணவு இடைவேளை, மதியம் 1:30 முதல் மாலை 4:20 நான்கு பாட வேலைகள் நடக்கும். மதியம் 2:50-3 மணி வரை இடைவெளி விடப்படும் என்று புதுவை அரசு தெரிவித்து இருக்கின்றது.