national
வேட்டி கட்டுனா உள்ள விட மாட்டீங்களா…? சர்ச்சையான சம்பவம்… ஷாப்பிங் மாலுக்கு அரசு வச்ச ஆப்பு..!
வேட்டி கட்டி முதியவர் ஒருவர் மாலுக்கு படம் பார்க்க வந்த நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த மாலுக்கு சீல் வைத்துள்ளது கர்நாடகா அரசு.
கர்நாடக மாநிலம் ,பெங்களூருவில் உள்ள ஜிடி ஷாப்பிங் மாலுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வேட்டி கட்டிய முதியவர் ஒருவர் படம் பார்க்க வந்திருக்கிறார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள்.
வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக மாலுக்கு வந்திருக்கின்றார். அவர் மாலுக்குள் நுழையும் போது அங்கிருந்த ஊழியர்கள் அவரை அனுமதிக்கவில்லை. வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை பேண்டை மாற்றிக் கொண்டு வந்தால் அனுமதிக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். முதியவரிடம் ஃப்ரீ புக்கிங் செய்யப்பட்ட பட டிக்கெட் இருந்தும் வேட்டி கட்டியதால் அனுமதிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்கள்.
மேலும் இது எங்களது மாலின் கொள்கைகளில் ஒன்று என அந்த ஊழியர்கள் தெரிவித்து இருக்கின்றார். அதன் பிறகு தான் அவர் விவசாயி என்பது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையானதை தொடர்ந்து அந்த மாலுக்கு ஏழு நாட்களுக்கு மூடி கர்நாடக அரசு சீல் வைத்து நேற்று உத்தரவிட்டுள்ளது.
விவசாயிக்கு ஏற்பட்ட இந்த மரியாதையை வன்மையாக கண்டிப்பதாகவும், ஒருவரின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்துவதை அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.