மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கின்றது. இந்த விபத்தில் யாரும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
தொடர்ந்து சரக்கு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி வருகின்றன, கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வீடு சரக்கு ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். இது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்திருந்தார்.
நேற்று மேற்கு வங்க தலைநகர் கல்கத்தாவில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த ரயில் ஜார்கண்ட் மாநிலத்தின் தடம் புரண்டது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 2 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

