national
பூண்டு காய்கறியா இல்ல, மசாலா பொருளா…! நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது என்ன…?
சமையலில் இடம்பெறும் மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் பூண்டுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கின்றது. பூண்டு ஒரு கிருமி நாசினி பூண்டை அரைத்து அதே அளவு தண்ணீர் கலந்து பருகினால் காலரா நம்மை நெருங்கவே நெருங்காது. வயிற்று உப்புசம் போக்கக்கூடிய பூண்டு இதய நோய், வயிற்று வலி, உடல் இரைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு கைகண்ட மருந்து நுரையீரலில் கட்டி இருக்கும்.
மார்பு சளியை கரைக்க கூடிய தன்மை கொண்டது. சமையலில் முக்கியத்துவம் கொண்ட பூண்டு ரசம், குழம்பு, துவையல் என பல்வேறு வடிவங்களில் பயன்பட்டு வருகின்றது. இதை வைத்து தற்போது ஒரு பட்டிமன்றம் நடைபெற்று வருகின்றது. அதாவது இந்த விவாதம் நீண்ட காலமாகவே நடந்து வருகின்றது.
2015 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாய அமைப்பு பூண்டை காய்கறியாக வகைப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தி இருந்தது. ஆனால் வேளாண்மை துறை வேளாண் உற்பத்தி சந்தை குழு சட்டம் 1972 இன் கீழ் பூண்டு ஒரு மசாலா பொருள் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டு கமிஷன் முகவர்கள் சங்கம் 2016ஆம் ஆண்டு வேளாண் துறையின் முடிவை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தனி நீதிபதி சங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். இந்த முடிவு முக்கிய விவசாயிகளை விட கமிஷன் ஏஜெண்டுகளுக்கு நன்மை பயக்கும் என்று வாதிட கடைசியில் வணிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்துகிறது. 2017ல் மனுதாரர்கள் உள்ளிட்ட ஒருவரான முகேஷ் ஒரு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ் ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி டி வெங்கட்ராமன் அடங்கிய அமர்வு முடிவுக்கு கொண்டு வந்தது. அதன்படி பூண்டு ஒரு காய்கறியாக அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் காய்கறி பட்டியலில் பூண்டு இடம் பிடித்துள்ளது. பல ஆண்டுகளாக நீடித்த விவாதத்தை இந்தூர் அமைப்பு முடித்து பூண்டை ஒரு காய்கறியாக அறிவித்து காய்கறி மற்றும் மசாலா சந்தைகளில் விற்பனை செய்ய அனுமதி வழங்கியது.
இந்த தீர்ப்பு விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே வேளாண்துறை இந்த விஷயத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல போகிறதா? அல்லது இதை ஒரு காய்கறியாக கருதி இந்த விஷயத்தை கிடப்பில் போட போகிறதா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.