Latest News
செல்போனை பறிக்க… சிறுமியை தரதரவனை இழுத்துச் சென்ற கும்பல்… அதிர்ச்சி வீடியோ..!
செல்போனை பறிக்க சிறுமியை வழிப்பறி கும்பல் பைக்கில் தரப்பட இழுத்துச் சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பஞ்சாபில் வழிப்பறி கொள்ளையர்களால் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கொடுமை அரங்கேறியிருக்கின்றது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கடந்த சனிக்கிழமை இளைய சகோதரியுடன் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த 12 ஆம் வகுப்பு லக்ஷ்மி என்ற பெண் சாலையில் நடந்து கொண்டிருந்தபோது அந்த பக்கம் இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் லட்சுமியின் செல்போனை பறிக்கும் முயற்சி செய்து இருக்கிறார்கள்.
ஆனால் செல்போனை இறுக்கமாக பிடித்துக் கொண்ட லட்சுமி அந்த வழிப்பறி கொள்ளையர்களிடம் போராடினார். லட்சுமியின் கையைப் பிடித்தபடி அந்த இளைஞர்கள் தரதரவென 350 மீட்டருக்கு இழுத்துச் சென்று பின்னர் கடைசியாக அந்த செல்போனை பிடுங்கி கொண்டு அவரை தள்ளிவிட்டு சென்று விட்டார்கள்.
சிறிது தூரம் சென்ற பின் வண்டியை நிறுத்தி அவர்களின் ஒருவன் சாலையில் விழுந்து கிடந்த லட்சுமியை பார்த்து மன்னித்துவிடு என்று சொல்லிவிட்டு செல்போனுடன் அங்கிருந்த மற்ற இருவருடன் சென்றுள்ளான். சிறுமி சாலையில் இழுத்துச் செல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கின்றது.
படுகாயம் அடைந்த லட்சுமி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் அந்த காட்சியின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
जालंधर में बच्ची का मोबाइल लूटा। बच्ची रोड पर घिसटती रही, ताकि मोबाइल बचा सके, लेकिन नहीं बचा पाई। कहती है ग़रीब पिता ने दिलाया था, पढ़ाई करती थी। अब क्या करूँगी।
रोंगटे खड़े करने वाला वीडियो और खबर देखिए।#Jalandhar #Crime #police #AAP
@DGPPunjabPolice pic.twitter.com/RnBIL57kzB— Baldev Krishan Sharma (@baldevksharma) September 8, 2024