Connect with us

திடீரென்று வந்த சரக்கு ரயில்… தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்… வைரலாகும் வீடியோ..!

national

திடீரென்று வந்த சரக்கு ரயில்… தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்… வைரலாகும் வீடியோ..!

தெலுங்கானா மாநிலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் வருவதை பார்த்த பெண் துரிதமாக செயல்பட்டு தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த வீடியோவானது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தெலுங்கானா மாநிலம் விகர்பாத்தின் நவாந்த்கியில் ஒரு பெண் தண்டவாளத்தை கடக்க முயன்றிருக்கின்றார்.

அப்போது திடீரென்று ரயில் ஒன்று வருவதை கவனித்தார். உடனே அந்த பெண் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார். ரயில் தனக்கு மேலே சென்று கொண்டிருப்பதை உணர்ந்து பதற்றம் அடைந்தாலும் அந்த பெண் அசையாமல் படுத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் அவள் தலையை தூக்க முயன்றாலும் அந்த சம்பவத்தை படம் எடுக்கும் நபர் அவளை தலையை கீழே வைக்கும்படி அறிவுறுத்துகின்றார்.

பின்னர் சில நொடிகளுக்குப் பிறகு ரயில் கடந்து செல்கின்றது. அவள் பாதுகாப்பாக தண்டவாளத்தில் இருந்து எழுந்தாள். அவரது தோழியான மற்றொருfr பெண் தண்டவாளத்தின் அருகே காத்திருப்பதை வீடியோவில் பார்க்க முடிகின்றது. இந்த சம்பவத்தை பார்த்த உள்ளூர் வாசிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். மேலும் அந்த பெண்ணின் சிந்தனை மற்றும் அதிர்ஷ்டம் அவரின் உயிரை காப்பாற்றி இருக்கின்றது என்று தெரிவித்து வருகிறார்கள்.

More in national

To Top