national
மேற்கு வங்காளம் முன்னாள் முதல்வர்… புத்ததேவ் பாட்டாச்சார்யா காலமானார்…!
மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் வயது மூப்பு காரணமாக புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்.
மேற்கு வங்காள முன்னாள் முதல் மந்திரியும் ,மூத்த இடதுசாரி தலைவருமான புத்ததேவ் பாட்டாச்சார்யா இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80 ஆகின்றது. சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த இவர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஆண்டு அவருக்கு நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 8:30 கொல்கத்தாவில் அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு மீரா என்கின்ற மனைவியும், சுசீதன் என்ற மகனும் இருக்கிறார்கள். மேற்கு வங்காள மாநிலத்தில் 1977 ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இடதுசாரிகள் ஆட்சி செய்தார்கள்.
1977 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் தான் தொடர்ச்சியாக வென்று ஆட்சியை கைப்பற்றி இருந்தார்கள். இந்த ஆட்சியில் முதல் மந்திரியாக இருந்தவர் ஜோதிபாசு. ஜோதி பாசுவுக்கு பின் 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை முதல் மந்திரியாக பதவி வகுத்தவர் புத்ததேவ் பட்டாச்சாரியா.
பின்னர் 2011 ஆம் ஆண்டு முதல் இடதுசாரிகளை வீழ்த்தி மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பிடித்தது. மேற்கு வங்காளத்தில் இடதுசாரி அரசின் மார்க்கிஸ்ட் கட்சியின் கடைசி முதல்வராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. சிறந்த கவிஞராக மொழிபெயர்ப்பாளராக இலக்கிய ஆளுமை கொண்டவராக திகழ்ந்தவர். இவரது மரணத்திற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்திருக்கின்றார்.