national
ஜார்க்கண்ட் மக்கள் நலனுக்காக பாஜகவில் இணைய இருக்கின்றேன்… சம்பாய் சோரன் அறிவிப்பு…!
ஜார்க்கண்ட் மாநிலம் முன்னாள் முதல்வர் ஹேம்நாத் சோரன் சிறைச்சென்ற போது மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வைத்தவர் சம்பாய் சோரன் ஐந்து மாதங்களாக அவர் முதல்வராக பணியாற்றி இருந்தார். ஹேம்நாத் சோரனுக்கு ஜூன் மாத இறுதியில் ஜாமீன் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அப்போது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் சமீபத்தில் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சம்பாய் சோரன் சந்தித்தார். அப்போது அவர் பாஜகவில் இணையலாம் என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை மந்திரி அமித்சாவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்த விஷ்வா ஷர்மா உடன் இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் பழங்குடியின தலைவருமான சம்பாய் சோரன் வரும் 30ஆம் தேதி ராஞ்சியில் நடக்கும் பொது கூட்டத்தில் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என்று பதிவிட்டு இருக்கின்றார். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில நலனுக்காக பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளதாக சம்பாய் சோரன் தெரிவித்து இருக்கின்றார்.