national
விஷமாக மாறிய உணவு… மதுராவில் 50 பேர் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி சம்பவம்…!
உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் நேற்று நடைபெற்ற கோகுலாஷ்டமி பண்டிகையின் போது பக்வீட் மாவில் செய்யப்பட்ட பஜ்ஜியை சாப்பிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் அரங்கேறியதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் அந்த மாவில் செய்யப்பட்ட பஜ்ஜியை சாப்பிட்டதால் இப்படி ஏற்பட்டிருக்க கூடும் என்று கூறப்படுகின்றது.
மேலும் அதில் விஷம் ஏதும் கலந்து இருக்கின்றதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் பிரியங்கா தெரிவித்த போது நேற்று இரவு 10 வீட்டு மாவில் செய்யப்பட்ட பக்வீட்களை சாப்பிட்டோம் உடனே வாந்தி எடுக்கத் தொடங்கினோம்.
தொடர்ந்து வயிற்றில் எரியும் உணர்வு ஏற்பட்டது என்று கூறியிருந்தார். மேலும் மற்றொருவர் பக்வீட் கிராமத்தை சேர்ந்த பார்காம் சிங் பஜ்ஜியை உட்கொண்ட பிறகு அங்கிருந்தவர்களுக்கு தலைசுற்றல் வாந்தி மற்றும் நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். இதுபோன்ற புகார்களுடன் அதிகாலை ஒரு மணி அளவில் 29 நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் சில நோயாளிகள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறதாக தெரிவிக்கின்றனர். மேலும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தற்போது அவர்களின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.