பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் தங்கள் வீட்டு பெண்ணை இழுத்துச் சென்ற இளைஞனின் சகோதரியை பெண்ணின் தகப்பனார், சகோதரர் உள்ளிட்ட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ரவீந்தர் சிங் என்பவரின் மகள் அப்பகுதியை சேர்ந்த இளைஞனை காதலித்து வந்துள்ளார். ரவீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரவீந்தர் சிங், அவரது தம்பி வீரேந்தர் சிங், மகன் அமன் சிங் மற்றும் உறவினர் சந்தோஷ் சிங் ஆகிய நான்கு பேரும் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி பஞ்சாபில் அந்த இளைஞனின் சொந்த ஊரான லூதியானாவிற்கு சென்றிருக்கின்றார்.
அங்கு வீட்டில் தனது மகளை இழுத்துச் சென்ற இளைஞனின் சகோதரி இருந்த நிலையில் அவரை ரவீந்தர் அவரின் தம்பி மகன் உறவினர் அனைவரும் சேர்ந்து அவரை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவும் எடுத்திருக்கின்றார்கள். நடந்ததை வெளியில் கூறினால் இந்த வீடியோவை ரிலீஸ் செய்து விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.
கடந்த மூன்று மாதங்களாக பயத்திலும் அதிர்ச்சியிலும் இருந்த அந்த இளைஞனின் சகோதரி தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் நால்வர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சகோதரி இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது