national
பெண் மருத்துவர் கொலை வழக்கு… உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி… வெளியான அதிரடி உத்தரவு…!
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. நாடு முழுவதும் இது தொடர்பாக மருத்துவர்கள் தங்களது பணிகளை விட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் என்கின்ற வாலிபர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இந்த கொலைக்கு காரணமானவர்களை விரைவாக தண்டிக்க கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் செவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவி செய்யும் அங்கீகரிக்கப்படும் நபராக வேலை பார்த்து வந்தவர் தான் சஞ்சய் ராய்.
இவர் தற்போது கைது செய்யப்பட்ட நிலையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறார்கள். கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் உண்மையை கண்டறியும் சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்து வந்தனர். மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்திப் கோர்ஸ் உட்பட ஐந்து மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ மனுதாக்கல் செய்திருக்கின்றது. இந்த மனுவை விசாரணை செய்த சியால்தா நீதிமன்றம் இந்த சோதனைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டிருக்கின்றது.