Latest News
சாலையில் விழுந்த ஓட்ட… எலி பண்ணவே இல்ல அது… அதிகாரி சொன்ன பதிலால் ஆடிப் போன அதிகாரிகள்…!
சாலையில் ஓட்டை விழுந்த நிலையில் எலி மீது பழி போட்ட அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்.
டெல்லி மற்றும் மும்பைக்கு இடையே 1,386 கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை ஓன்று போடப்பட்டு வருகின்றது. இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால் டெல்லி மற்றும் மும்பைக்கு இடையேயான பயண நேரம் குறையும் எனக் கூறப்படுகின்றது. அதாவது 24 மணி நேரத்திலிருந்து 12 முதல் 13 மணி நேரமாக குறையும் என்று கூறப்படுகின்றது.
இது ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த விரைவு சாலை பயணிக்கிறது. இந்த நெடுஞ்சாலை அமைப்பதற்கான 80 சதவீத பணிகள் முடிந்து விட்டதாகவும் இன்னும் ஒரு வருடத்தில் அனைத்து பணிகளும் முடிந்து சாலை பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் இந்த நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சாலையின் பல பகுதிகளில் பள்ளங்கள் ஏற்படுகின்றது. இந்த பள்ளங்கள் குறித்து பேசிய ஊழியர் ஒருவர் எலி ஓட்டை போட்டதால் தான் இந்த பள்ளம் உருவானது எனக் கூறியிருந்தார்.
ஊழியரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து அந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் தண்ணீர் கசிவு காரணமாகத்தான் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது எனவும், பள்ளம் விரைவில் சரி செய்யப்படும் என்று விரைவு சாலையின் திட்ட இயக்குனர் பல்வீர் யாதவ் தெரிவித்திருக்கின்றார்.